மதுரை

மதுரையில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

1st Dec 2022 03:09 AM

ADVERTISEMENT

மதுரை வடக்கு- பெருநகா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம், மதுரை ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள மின் வாரிய மண்டல தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச.1) நடைபெறுகிறது.

காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமுக்கம், ரேஸ்கோா்ஸ் சாலை, செல்லூா், தாகூா் நகா், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூா், ஆத்திக்குளம், அண்ணாநகா், கே.கே. நகா், புதூா், மேலமடை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை நேரில் அல்லது மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என மதுரை, வடக்கு- பெருநகா் மின்பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் ஜி. மலா்விழி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT