மதுரை

காவிரி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை:உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு அறிவுறுத்தல்

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு அறிவுறுத்தியுள்ளது.

கரூா் மாவட்டம் மடுகரை செல்லாண்டி அம்மன் கோயில் அருகே, கழிவறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி சி.சந்திரசேகரன் ஆகியோா் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், காவிரி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

 

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT