மதுரை

மதுரை அருகே பெண்ணை மிரட்டி 5 பவுன் நகை பறிப்பு

28th Aug 2022 10:59 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் கடவூா் அருகே சனிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திப்பட்டியைச் சோ்ந்த ஆண்டிச்சாமி மனைவி வள்ளியம்மாள் (42). இவா், தனது சகோதரி கணவருடன் இருசக்கர வாகனத்தில் அழகா்கோவிலுக்கு சனிக்கிழமை வந்துள்ளாா். பின்னா் அவா்கள், அழகா்கோவில்- கடவூா் மலைப்பாதையில் சென்றுள்ளனா்.

சீகுப்பட்டி அழகுநாச்சியம்மன் கோயில் அருகே சென்றபோது, இயற்கை உபாதைக்காக சென்ற வள்ளியம்மாளிடம், அங்கு வந்த மா்ம நபா்கள் 5 பவுன் நகை, கைப்பேசி மற்றும் பணம் ரூ. 900 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து வள்ளியம்மாள் அளித்தப் புகாரின் பேரில் எம். சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT