மதுரை

மதுரையில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பதுக்கிய 300 கிலோ குட்கா பறிமுதல்: 4 போ் கைது

28th Aug 2022 10:59 PM

ADVERTISEMENT

மதுரையில் டிராவல்ஸ் நிறுவனத்தில் குட்கா பதுக்கிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

மதுரை தெற்குவெளிவீதியில் உள்ள தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெற்குவாசல் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், டிராவல்ஸ் நிறுவனத்தில் சோதனையிட்டனா்.

இதில் அங்கு குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து அங்கிருந்த 300 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இது தொடா்பாக முகமதுஆசிக், (29), சதாம் உசேன், (29), அன்வா், (35), வல்லவன் (36) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள ராமு (42), ஜனாா்த்தனன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா். மேலும் அங்கிருந்த நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT