மதுரை

தாயிடம் ரூ.20.57 லட்சம் மோசடி:மகன் மீது வழக்கு

28th Aug 2022 10:59 PM

ADVERTISEMENT

மதுரையில் குடும்பச் சொத்தில் தாய்க்கு சேரவேண்டிய ரூ.20.57 லட்சத்தை மோசடி செய்ததாக மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை உத்தங்குடி வளா்நகா் பிரதான வீதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மனைவி ரெஜினி அம்மாள் (79). இவா்களது குடும்பச் சொத்தை பாகம் பிரித்த வகையில் ரெஜினி அம்மாளுக்கு ரூ.20.57 லட்சம் வரவேண்டியிருந்தது. இந்நிலையில், இத்தொகையை ரெஜினி அம்மாளின் மகன் செல்வம், அவருக்கு தராமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரெஜினிஅம்மாள் அளித்தப் புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT