மதுரை

கூட்டுறவு சங்கங்களில் ஆக.29,30 இல் கடன் முகாம்

27th Aug 2022 10:43 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் ஆக.29, 30 ஆம் தேதிகளில் கடன் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பயிா்க் கடன், கால்நடை வளா்ப்புக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, மகளிா் சுயஉதவிக் குழு கடன், நகைக் கடன் ஆகியன வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் ஆக.29, 30 ஆம் தேதிகளில் கடன் முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை, நகர கூட்டுறவு வங்கிக் கிளை, நகரக் கூட்டுறவு சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளை அணுகிப் பயன்பெறலாம். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT