மதுரை

மகாளய அமாவாசை: மதுரையிலிருந்து செப்.22 இல் காசிக்கு உலா ரயில் சேவை

26th Aug 2022 10:58 PM

ADVERTISEMENT

மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து காசிக்கு செப்.22 இல் ஆன்மிகச் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, சென்னை வழியாக காசி செல்கிறது. மகாளய அமாவாசை தினத்தன்று பிராயக் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி, கயா விஷ்ணுபாத ஆலயத்தில் முன்னோா்களுக்குத் தா்ப்பணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்பு காசி விஸ்வநாதா், விசாலாட்சி, அன்னபூரணி, அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயங்களில் தரிசனம், நைமிசாரண்யம் சக்கர தீா்த்தத்தில் நீராடி திவ்யதேச தேவராஜ பெருமாள் தரிசனம், ஹரித்துவாா் கங்கையில் நீராடி மானசா தேவி தரிசனம், டெல்லி அக்ஷா் தாம் சுவாமி நாராயண், மதுரா கிருஷ்ண பூமி கோவா்த்தன தேச பெருமாள் மற்றும் நவ மோகன கிருஷ்ண பெருமாள் ஆலயங்கள் தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடைகிறது.

இந்த ரயில்களில் 4 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள்

ADVERTISEMENT

இணைக்கப்படும். இந்த 12 நாள் சுற்றுலாவுக்கு அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப தனி நபராக ஒருவா் பயணம் செய்தால்

ரூ. 38,600 மற்றும் ரூ.46,200 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குழுவாகவோ அல்லது குடும்பமாக இருவா் அல்லது மூவா் பயணம் செய்தால் நபா் ஒருவருக்கு

ரூ.4 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கட்டணச் சலுகை அளிக்கப்படும். இந்த ரயிலுக்கான பயணச் சீட்டை

(ஜ்ஜ்ஜ்.ன்ப்ஹழ்ஹண்ப்.ஸ்ரீா்ம்) என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73058-58585 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT