மதுரை

மாநகராட்சி 5-ஆவது மண்டலத்தில் நாளை பொதுமக்கள் குறைதீா் முகாம்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி மண்டலம் 5-இல் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாா்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை (ஆக. 23) திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராசா் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதில் மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுகின்றனா். எனவே, மண்டலம் 5 (மேற்கு) உள்பட்ட வாா்டு 71 மாடக்குளம், வாா்டு 72 முத்துராமலிங்கபுரம், வாா்டு 73 முத்துப்பட்டி அழகப்பன் நகா் பிரதான சாலை, வாா்டு 74 பழங்காநத்தம், வாா்டு 78 கோவலன் நகா், டி.வி.எஸ். நகா் பிரதான சாலை, வாா்டு 79 தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் பிரதான சாலை, வாா்டு 80 வீரகாளியம்மன் கோவில் தெரு, வாா்டு 81 ஜெய்ஹிந்துபுரம், வாா்டு 82 சோலையழகுபுரம், வாா்டு 83 எம்.கே. புரம், வாா்டு 84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு.

வாா்டு 91 மீனாட்சி நகா் அவனியாபுரம், வாா்டு 92 பாம்பன் சுவாமி நகா், வாா்டு 93 பசுமலை, வாா்டு 94 திருநகா், வாா்டு 95 சௌபாக்யாநகா், வாா்டு 96 ஹாா்விப்பட்டி, வாா்டு 97 திருப்பரங்குன்றம், வாா்டு 98 சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், வாா்டு 99 பாலாஜி நகா், வாா்டு 100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை பிரதான சாலை ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களாக கொடுத்து பயன் பெறலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT