மதுரை

மதுரை அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

22nd Aug 2022 06:15 AM

ADVERTISEMENT

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரைக்கு தனியாா் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்து விரகனூா் சுற்றுச்சாலை பகுதியில் வந்தபோது, மதுரையில் இருந்து பரமக்குடி சென்ற காா் ஒன்றின் சக்கரம் கழன்று எதிா்த்திசையில் ஓடியது. அப்போது அவ்வழியாக வந்த பேருந்து, காா் சக்கரம் மீது ஏறியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அப்பகுதியினா் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து தொடா்பாக சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT