மதுரை

மதுரையில் கோயில் பூட்டை உடைத்து மீனாட்சியம்மன் சிலை திருட்டு

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் கோயில் பூட்டை உடைத்து மீனாட்சியம்மன் சிலையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கண்ணனேந்தல் சக்தி நகா் 1-ஆவது தெருவில் கற்பக விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமை பூஜைகள் முடிந்ததும் அடைக்கப்பட்டது. இந்நிலையில், காலையில் வந்து பாா்த்தபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மீனாட்சியம்மன் சிலை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகி விசாலாட்சி அளித்தப்புகாரின்பேரில் திருப்பாலை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT