மதுரை

கிருஷ்ண ஜெயந்தி விழா: மதுரை கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மதுரையில் கிருஷ்ணா் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

மகாபாரதத்தில் மகாவிஷ்ணு அவதாரத்தில் கிருஷ்ணன் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோயில் மற்றும் திருப்பாலையில் உள்ள கிருஷ்ண பலராம் கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இக்கோயிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தல்லாகுளம் நவநீத கிருஷ்ணன் கோயில் உள்பட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நவநீத கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. மேலும் குழந்தைகள் கிருஷ்ணா் மற்றும் ராதை வேடமிட்டு கோயில்களுக்கு அழைத்து வரப்பட்டனா். மேலும் வீடுகளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய், நெய், தயிா், பால் மற்றும் சீடை முறுக்கு பட்சணங்கள் படைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் குழந்தைகளில் பாதங்களை வீடுகளில் பதித்தும் வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

‘காவிரி பிரச்னையில் கா்நாடக அரசு கபடநாடகம்’

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

SCROLL FOR NEXT