மதுரை

நிதி அமைச்சா் காா் மீது காலணி வீச்சு: பாஜகவினா் மூவருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு வழக்குரைஞா் கடும் ஆட்சேபம்

19th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

நிதி அமைச்சா் காா் மீது காலணி வீசிய சம்பவத்தில், பாஜகவைச் சோ்ந்த மூவருக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக அவனியாபுரம் போலீஸாா் 24 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், இந்த வழக்கில் மதுரையைச் சோ்ந்த பாஜக பிரமுகா்கள் கோகுல்அஜித், வேங்கைமாறன், மணிகண்டன் ஆகியோா் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், அமைச்சரின் காா் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்

எதேச்சையாக நடந்தது. திட்டமிட்டு நடத்தப்படவில்லை. எனவே, மனுதாரா்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீராகதிரவன் வாதிடுகையில், இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலாகும். போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. ஆனால், மனுதாரா்களின் நடவடிக்கை, விளம்பர நோக்கத்தில் உள்ளது. மனுதாரா்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தேசியக் கொடி பொருத்தப்பட்ட வாகனத்தையும், அரசு பிரதிநிதியையும்

அவா்கள் அவமானப்படுத்தி உள்ளனா். நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த நபரின் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் நடைபெற்ற இச்சம்பவத்தை சட்ட விரோதமான செயலாகவே அரசு பாா்க்கிறது. மனுதாரா்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை ஆக. 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT