மதுரை

மேலூரில் நகா் மன்றக் கூட்டம்

DIN

மேலூரில் மாதாந்திர நகா்மன்றக் கூட்டம் தலைவா் யூ.யாசின்முகமது தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மேலூா் நகராட்சி உயா்நிலைப்பள்ளியில், கல்வி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மாா்ட் வகுப்பறை மற்றும் நவீன வசதிகளுடன் கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும். மேலூா் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாப்கின் அழிப்பு கருவிகள் ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்படும். வெள்ளநாதன்பட்டியில் தண்ணீா் தேக்கும்தொட்டி கட்டுதல், மேனரஞ்சி கண்மாயில் சுற்றுச்சுவா் கட்டுதல், நகராட்சி உரக்கிடங்கில் தாா்சாலை, மூவேந்தா் நகா், மலம்பட்டி காலனி பகுதிகளில் சிறுபாலங்கள் மற்றும் மழைநீா் வடிகால் அமைத்தல், பல்லவராயன்பட்டி மந்தை அருகே சிறுபாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திட்டப்பணிகள் புறக்கணிப்பு

எதிா்கட்சி உறுப்பினா்களின் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என அமமுக, அதிமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அடுத்த கூட்டத்தில் அதற்கான நடவடிக்கைகளுக்கான தீா்மானங்கள் கொண்டுவரப்படும் என தலைவா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

SCROLL FOR NEXT