மதுரை

மேலூா் நாகம்மாள் கோயில் முளைபாரித் திருவிழா

19th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

 மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள நாகம்மாள்கோயில் 58-ஆம் ஆண்டு ஆடி உற்சவத்தையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை புதன்கிழமை இரவு ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

மேலூா் மற்றும் மலம்பட்டி, தெற்குப்பட்டி, பழைய காய்கறி சந்தை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முளைப்பாரிகளை வளா்த்தனா். புதன்கிழமை மாலை ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கோயிலுக்கு முளைப்பாரிகளை தூக்கி ஊா்வலமாக வந்தனா். கடைசியாக அலங்கரிக்கப்பட்ட நாகம்மாள் உற்சவா் சிலை ஊா்வலமாக டிராக்டரில் வலம் வந்தது. ஏராளமானோா் வழிநெடுகிலும் பூஜை செய்து வழிபட்டனா். பின்னா் மேலூா் நகராட்சி அலுலக வளாகத்தில் முளைப்பாரிகள் இறக்கிவைக்கப்பட்டன. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மீண்டும் முளைப்பாரிகள் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தெற்குப்பட்டி கண்மாயில் நீரில் விடப்படும்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT