மதுரை

பாலியல் வழக்கில் மேல்முறையீடு: மருத்துவா், ஆய்வாளா் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

பாலியல் வழக்கில் தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல் ஆய்வாளா், மருத்துவா் ஆகியோருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை சோ்ந்தவா் சுரேஷ், தனது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து 2019-இல் தீா்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் சுரேஷ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரா் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவரது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இந்த வழக்கில் மருத்துவ ஆய்வு நடத்திய மருத்துவா்கள், காவல் ஆய்வாளா் முத்துலெட்சுமி, தடயவியல் நிபுணா் ஆகியோா் ஆக.22 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இந்த வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்கள், அறிக்கைகளை தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையா், நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT