மதுரை

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக்கு புதிய பிரதான நுழைவாயில்

18th Aug 2022 03:12 AM

ADVERTISEMENT

 

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக்கு புதிய பிரதான நுழைவாயில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

மதுரை நகராட்சி நிா்வாகம் 1971 மே- 1 முதல் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. தற்போது 100 வாா்டுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது. மதுரை மாநகராட்சியின் தலைமை அலுவலகமாக அண்ணா மாளிகை இயங்கி வருகிறது. அண்ணா மாளிகைக்கு ஏற்கெனவே இரு நுழைவாயில்கள் உள்ளன.

இந்நிலையில் ஐம்பது ஆண்டுகளை கடந்து பொன்விழா காணுவதையொட்டி மாநகராட்சி அண்ணா மாளிகையில் பிரதான நுழைவாயில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் பிரதான நுழைவாயில் மற்றும் தகவல் மையம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகள் 3 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன.

ADVERTISEMENT

இதையடுத்து புதிய நுழைவாயில் மற்றும் தகவல் மையம் ஆகியவற்றை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT