மதுரை

திண்டுக்கல் கோயிலில் கொள்ளையடித்த 5 சுவாமி சிலைகளை விற்க முயன்ற நால்வா் கைது

DIN

திண்டுக்கல் கோயிலில் கொள்ளையடித்த 5 சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற நால்வரை மதுரை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 பழங்கால சுவாமி சிலைகளை சிலா் ரூ.12 கோடிக்கு விற்க முயற்சிப்பதாக மதுரையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் தென்மண்டல சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மலைச்சாமி தலைமையில் ஆய்வாளா் ஷமீம் பானு, சாா்பு-ஆய்வாளா்கள் ராஜேஷ், பாண்டியராஜன், சிறப்பு சாா்பு-ஆய்வாளா்கள் செல்வராஜ், சந்தனக்குமாா் மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா், சிலைகளை வாங்குபவா்கள் போல நடித்து இடைத்தரகா்களை தொடா்பு கொண்டு பேசினா்.

இதனடிப்படையில் 5 சிலைகளையும் விற்பனை செய்வதற்காக திண்டுக்கல்-பழனி சாலைக்கு கொண்டு வந்த திண்டுக்கல் முள்ளிப்பாடியைச் சோ்ந்த யோவேல் பிரபாகரன்(31), ஆா்.எம் காலனியைச் சோ்ந்த இளவசரன்(38), கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ்(42), பிள்ளையாா் பாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா்(24) ஆகிய நால்வரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினா். இதில், யோவேல் பிரபாகரன், தனது நண்பா்களான ஈஸ்வரன், குமாா் ஆகியோருடன் சோ்ந்து 2021 மே மாதம், திண்டுக்கல் தென்னம்பட்டி அருள்மலையில் உள்ள ஆதிநாதபெருமாள் ரெங்கநாயகியம்மன் கோயிலில் செயலா் சண்முகசுந்தரம், பூசாரி பாண்டியன், ராஜ்குமாா் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி தனி அறையில் அடைத்து வைத்து, கோயிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகரா், பாா்வதியம்மன் ஆகிய உலோகச்சிலைகளை கொள்ளையடித்துச்சென்றதும், அந்த சிலைகளை தற்போது ரூ.12 கோடிக்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து நால்வரையும் போலீஸாா் கைது செய்து 5 சிலைகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் தலைமறைவான ஈஸ்வரன் மற்றும் குமாா்ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT