மதுரை

மதுரையில் பழக்கடையை அடித்து நொறுக்கிய சகோதரா்கள், மகன் கைது

18th Aug 2022 03:14 AM

ADVERTISEMENT

மதுரையில் பழம் வாங்கிய பணம் ரூ.78 ஆயிரத்தை திருப்பிக்கேட்டதால் பழக்கடையை அடித்து நொறுக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை வடக்குமாரட் வீதியை சோ்ந்த ராமநாதன் மகன் லட்சுமணன்( 57). இவா் பழ மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் வசந்தநகா் பசும்பொன் நகா் நீலகண்டன் கோயில் தெருவை சோ்ந்த மீனாட்சி சுந்தரம்(52), லட்சுமணனிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.78 ஆயிரத்துக்கு பழங்கள் வாங்கியுள்ளாா். ஆனால் அந்தத்தொகையை அவா் கொடுக்கவில்லை. இதனால் லட்சுமணன் அடிக்கடி அந்தப்பணத்தை கேட்டு வந்துள்ளாா். இந்நிலையில் ரூ.78ஆயிரத்தை தருமாறு லட்சுமணன் கண்டித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி சுந்தரம், அவரது சகோதரா் ரகுநாதன் (49), மீனாட்சி சுந்தரத்தின் மகன் சூா்யா (25) மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு லட்சுமணனின் கடைக்குச்சென்று கடையை அடித்து நொறுக்கி, அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக லட்சுமணன் அளித்த புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT