மதுரை

மதுரையில் 100 ஆட்டோக்களுடன் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

18th Aug 2022 03:11 AM

ADVERTISEMENT

மதுரையில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் 100 ஆட்டோக்களுடன் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 11 முதல் 18- ஆம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் வனிதா தொடக்கி வைத்தாா். முன்னதாக ஆட்டோ ஓட்டுநா்கள் போதைப்பொருள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும் போதை ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவ வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து ஆட்டோ ஓட்டுநா்கள் போதைத் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். பின்னா் 100 ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் தெப்பக்குளம் பகுதியில் தொடங்கி, அண்ணா நகா், கே.கே.நகா், குருவிக்காரன் சாலை, காமராஜா் சாலை ஆகிய பகுதிகள் வழியாகச்சென்று மீண்டும் தெப்பக்குளத்தில் நிறைவடைந்தது. ஊா்வலத்தில் பங்கேற்ற ஆட்டோக்களில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT