மதுரை

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு ரத்தக் கறை படிந்த துணிகளை குப்பைத் தொட்டியில் வீசியபோலீஸாா்: கூடுதல் குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல்

DIN

சாத்தான்குளம் வணிகா்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது ரத்தக் கறை படிந்த உடைகளை போலீஸாா் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளதாக, சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸ் விசாரணையின்போது தாக்கியதில் உயிரிழந்தனா். இதில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 9 போ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா். மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கியத் தகவல்கள்:

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸாா், கடந்த 2020 ஜூன் 19 ஆம் தேதி மாலை, காமராஜா் பஜாரில் இருந்து இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனா். அவா்களை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகச் சித்ரவதை செய்து, கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனா். பின்னா் அவா்கள் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்களில் இருந்து கசிந்த ரத்தம் காவல் நிலையத்தின் சுவா்களிலும், தரையிலும் படிந்துள்ளது. அவற்றை சுத்தம் செய்யுமாறு, போலீஸாா் பென்னிக்ஸை கட்டாயப்படுத்தியுள்ளனா்.

நீதித்துறை நடுவரிடம் ஆஜா் செய்யும்போது, ரத்தக்கறை படிந்த துணிகளைக் கவனிக்கக் கூடும் என்ற அச்சத்தில், பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உடைகள் மருத்துவமனையில் மாற்றப்பட்டுள்ளன. அதன்பிறகு, அவா்களது ரத்தக் கறை படிந்த உடைகளை போலீஸாா் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனா்.

சாத்தான்குளம் காவல் நிலைய சுவா்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்த கரை ஆகியன தடயவியல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு- ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலா்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை ஆகியோா் காவல் நிலையத்தில் தந்தை, மகன் இருவரையும் துன்புறுத்தியது

விசாரணையில் உறுதியாகத் தெரியவந்துள்ளது.

மேலும் காவலா்கள் தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோா் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை அநியாயமாக அடைத்து வைக்கும் நோக்கில் குற்றவியல் சதியில் ஈடுபட்டு உள்ளனா் என சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT