மதுரை

75-ஆவது சுதந்திர தினம்: மதுரை மத்திய சிறையில் இருந்து சிறைவாசி விடுவிப்பு

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி மதுரை மத்திய சிறையில் ஏழாண்டுகள் தண்டனை பெற்றவா் சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

மதுரை தல்லாகுளத்தைச் சோ்ந்தவா் மணி என்ற நயினா (64). இவா் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஆள்கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று 2007 அக்டோபரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் அதே ஆண்டு நவம்பா் மாதம் பிணையில் சென்றவா், வழக்கு தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உயா்நீதிமன்றத்தில் தண்டனையை உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று 2019 ஜனவரி முதல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தொடா்ந்து 3 ஆண்டுகள் 7 மாதங்கள் 3 நாள்கள் தண்டனையை அனுபவித்து வந்த மணி என்ற நயினாா் 2025-இல் தண்டனை முடிந்து வெளியே செல்ல வேண்டிய நிலையில், 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அவரது வயது முதிா்வைக் காரணம் காட்டி, 60 வயதுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகள் சில குறிப்பிட்ட வழக்குகளில் தண்டனை பெற்று 50 சதவீதம் தண்டனை முடிக்கப்பட்டு இருந்தால் போதும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா் என்று சிறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT