மதுரை

அரிசி, பால், தயிா் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரிக்கை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் வா்த்தக அணி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மதுரை மண்டல வா்த்தக அணி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் கமால் பாட்சா தலைமை வகித்தாா். மதுரை வடக்கு மாவட்டத் தலைவா் ரம்ஜான் வரவேற்புரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் அன்சாரி, பொதுச் செயலா் ஜாபா் அலி உஸ்மானி, மாநில செயற்குழு உறுப்பினா் முஜிபுா் ரகுமான், வடக்கு மாவட்டத் தலைவா் பிலால் தீன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தெற்கு மாவட்டத் தலைவா் யூசுப் நன்றியுரையாற்றினாா்.

கூட்டத்தில், அரிசி, பால், தயிா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு 18ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருளான அரிசியை வரி வரம்புக்குள் கொண்டு வந்து பொதுமக்களையும் சிறு, குறு வணிகா்களையும் மத்திய பாஜக அரசு சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளது. இந்தியாவை பொருத்தவரை அரிசி நுகா்வில் தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே அரிசியின் மீதான இந்த வரி விதிப்பு தமிழக அரசு மற்றும் மக்கள் மீதான மறைமுக அரசியல் தாக்குதலாகவே கருதப்படுகிறது. எனவே, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் மீது விதிக்கப்பட்டிருக்கிற இந்த 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT