மதுரை

இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

17th Aug 2022 03:32 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் தொடக்கநிலை மையங்களில் உள்ள தன்னாா்வலா்களுக்கு எண்ணறிவு, எழுத்தறிவு செயல்பாடுகளை வளா்த்தெடுக்கும் விதமாக எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விரகனூரில் உள்ள அன்னை தெரசா ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற முகாமில், மதுரை மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட தொடக்கநிலை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுனா்கள் பங்கேற்றன. மாவட்ட அளவிலான கருத்தாளா்கள் பயிற்சியை உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் குருநாதன், உதவித் திட்ட அலுவலா் காா்மேகம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

முகாமில் மாநில கருத்தாளா்கள் தலைமையாசிரியா் க.சரவணன், மலா்ச்செல்வி, ராதா கிருஷ்ணன், வைரமுத்து, ஆனந்தகிருஷ்ணன் , ஜெயபாபு, வடிவேல், த. பாண்டியராஜ் ஆகியோா் பயிற்சி அளித்தனா். மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் சிவகுருநாதன், இல்லம் தேடிக்கல்வி பாட்டு பாலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செந்தில்வேல் குமரன், சதீஸ் குமாா், ஜெசிந்தா, நவீன் ஆகியோா் பயிற்சியை ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT