மதுரை

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இருவா் மாயம்?தேடும் பணி தீவிரம்

16th Aug 2022 07:10 AM

ADVERTISEMENT

மதுரை பரவை அருகே வைகை ஆற்றில் குளிக்கச்சென்ற 2 போ் மாயமானதாக கூறப்பட்டதையடுத்து, தீயணைப்புப் படையினா் தேடி வருகின்றனா்.

மதுரை தெற்குவாசலைச் சோ்ந்தவா் தனசேகரன் (23). மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (20). இருவரும் நண்பா்கள். இந்நிலையில், இருவரும் மதுரை மாவட்டம் துவரிமான் அருகே வைகையாற்றில் திங்கள்கிழமை பிற்பகலில் குளிக்கச்சென்றனா். அங்கு குளித்துக்கொண்டிருந்த நிலையில் இருவரும் திடீரென மாயமாகினா். இதுதொடா்பான தகவலின்பேரில் தீயணைப்புப்படையினா், இருவரும் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT