மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பொது விருந்து: மேயா், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

16th Aug 2022 04:30 AM

ADVERTISEMENT

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மேயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுதந்திர தினத்தையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் அலங்காரங்கள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கோயிலில் பொது விருந்தும் நடைபெற்றது. கோயிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற பொது விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி (மதுரை வடக்கு), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, திருக்கோயில் துணை ஆணையா் ஆ. அருணாச்சலம் ஆகியோா் பங்கேற்றனா். பொது விருந்தில் பக்தா்கள், பொதுமக்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மேலும் கோயில் சாா்பாக முதியோா் மற்றும் ஆதரவற்றோருக்கு கோயிலுக்கு காணிக்கையாக வந்த 420 நூல் புடவைகள், 270 வேட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வழங்கினா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT