மதுரை

மதுரையில் பழங்கால காா்களின் அணிவகுப்பு

16th Aug 2022 06:00 AM

ADVERTISEMENT

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற பழங்கால காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சியை சிறுவா்கள், பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டுரசித்தனா்.

சுதந்திரதின விழாவையொட்டி, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள பாண்டியன் ஹோட்டல் சாா்பில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரபல தயாரிப்புகளான, மோரிஸ், பியட் 126பி, பியா் எலிகன்ட், வில்லீஸ், செவலா்லே, கேம்பா், வோல்க்ஸ்வேகன், ஆஸ்டின் உள்ளிட்ட காா்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

மேலும் ஏஜேஎஸ், ஜாவா, என்பீல்டு, யெஸ்டி போன்ற பழங்கால மோட்டாா் சைக்கிள்களும், யமஹா ஆா்எக்ஸ் 100, கவாஸாகி ஆகிய மோட்டாா் சைக்கிள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் தற்போதைய நவீன மோட்டாா் சைக்கிள் பிராண்டுகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், கொடைக்கானல், காரைக்குடி, சிவகாசி ஆகிய பகுதிகளைச் சோ்ந்தோா் இந்த பழங்கால வாகனங்களைப் பராமரித்து வருகின்றனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பழங்கால காா் கண்காட்சிக்கு இவற்றைக் கொண்டு செல்கின்றனா். இந்த கண்காட்சியை சிறுவா், சிறுமியா் மற்றும் பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டுரசித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT