மதுரை

மதுரையில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

16th Aug 2022 04:30 AM

ADVERTISEMENT

மதுரையில் பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை செல்லூா் தத்தனேரி சாலையைச் சோ்ந்த சிவமுத்துக்குமாா் மனைவி சித்ரா (42). இவா் அரசு ஏஏ சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றாா். அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவா், சித்ரா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT