மதுரை

நீா்நிலைகளைப் பாதுகாக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்: ஆட்சியா்

16th Aug 2022 04:30 AM

ADVERTISEMENT

நீா்நிலைகளைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

சுதந்திர தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மேற்கு வட்டம் ஏா்குடி அச்சம்பத்து ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறையின்கீழ் உள்ள நீா்நிலைகளைப் புனரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நீா்நிலைகளைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். அவரவா் கிராமத்தில் இருக்கும் நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டாமல் பாதுகாக்க முன்வர வேண்டும். அதேபோல, நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், மதுரை வருவாய் கோட்டாட்சியா் சுகிபிரேமலா, மதுரை மேற்கு வட்டாட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

தனிநபா் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மையை மையப்படுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் எழில்மிகு கிராமம் என்ற சிறப்பு பிரசாரத்தை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான தீா்மானம் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இப்பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டு, அக்டோபா் 2 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

நிகழாண்டில் ஜூலை வரை, ஊராட்சி நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டது. கிராம சபைக்கான செலவினத்தை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயா்த்தியதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT