மதுரை

ரூ.275-க்கு அதிவேக பைபா் இணைய சேவை:பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு

15th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.275-க்கு அதிவேக பைபா் இணைய சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் மதுரை தொலைத்தொடா்பு மாவட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திரதினத்தையொட்டி அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் பிரீடம் 75 எனும் குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் பிஎஸ்என்எல்-இன் அதிவேக பைபா் இணைய எப்டிடிஎச் சேவையில் மாதம் ரூ.449 அல்லது ரூ.559 திட்டத்தில் புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாள்களுக்கு ரூ. 275 மற்றும் ஜிஎஸ்டி வரி மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும் டிஸ்னி, ஹாட்ஸ்டாா் உள்ளிட்ட பல ஓடிடி தளங்கள் இலவச இணைப்பாக உள்ள பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஓடிடி தளத்துடன் கூடிய மாதம் ரூ.999 திட்டத்தில் புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாள்களுக்கு வெறும் ரூ. 775 மற்றும் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதுமானது. இச்சலுகை ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பா் 13 வரை அமலில் இருக்கும். மேலும் விவரங்களுக்கு 94860-25100 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT