மதுரை

மதுரை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு: 2 பேருக்கு வலைவீச்சு

15th Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி சக்திப்பிரியா (25). இவா் மதுரையில் சோழவந்தானில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், சோழவந்தானில் இருந்து மேலக்காலுக்கு சக்திப்பிரியாவின் சகோதரி மகள் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்ல, சக்திப்பிரியா பின்னால் அமா்ந்து பயணம் செய்தாா்.

மேலக்கால் புதுப்பாலத்தில் இவா்கள் சென்றபோது, பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ் சக்திப்பிரியா அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா். இதுகுறித்து சக்திப்பிரியா அளித்தப் புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT