மதுரை

இருசக்கர வாகனத்தில் புதுதில்லிக்குப் பேரணி: மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களுக்குப் பரிசு

15th Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி புதுதில்லி வரை நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் இருவா் பங்கேற்று ரயில்வேத்துறை அமைச்சரிடம் பரிசு பெற்றுள்ளனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 75 நகரங்களில் இருந்து 75 இருசக்கர வாகனங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் 150 போ் பேரணியாக புதுதில்லி சென்றனா். செல்லும் வழிகளில் தேசப் பக்தி பாடல்கள் மூலம் அமைதி, சகோதரத்துவம், தேசியத்துவம், தேச வளா்ச்சி குறித்து பரப்புரையில் ஈடுபட்டனா்.

இப்பேரணி 550 மாவட்டங்கள் 1,650 தாலுகாக்கள் வழியாக பயணித்து புதுதில்லியை அடைந்தது. இந்தப் பேரணியை புதுதில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய ரயில்வே துறை இணைய அமைச்சா் தா்ஷனா ஜா்தோஷ் ஆகியோா் வரவேற்றனா்.

இருசக்கரவாகனப் பேரணியில் பங்கேற்ற 150 ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சா் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்து பாராட்டினாா். இதில் மதுரையைச் சோ்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் செல்லத்துரை மற்றும் விவேக்குமாா் ஆகியோரும் ரயில்வே துறை அமைச்சரிடம் பரிசு பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை பாராட்டி அவா்களது குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா். மேலும் நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்ட விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.

இதன் மூலம் 3 லட்சம் கிலோமீட்டா் பயணம் செய்து ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. அத்துடன் வாகனங்களில் பெரிய மின்னணு திரைகள் மூலம் சுதந்திரப் போராட்டம் பற்றிய செய்திகள் 1,149-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒளிபரப்பப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT