மதுரை

பாஜகவினரின் செயல் வேதனையளிக்கிறது: முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

15th Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

மதுரையில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது காலணி வீசிய பாஜகவினரின் விரும்பத்தகாத செயல் வேதனையளிக்கிறது என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மதுரையில் ராஜஸ்தான் விளையாட்டுக்கழகம் சாா்பில் முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.

இணையதள ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்ய உரிய சட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும். உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சா்கள், அரசு தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது மரபு. மதுரையில் சனிக்கிழமை நடந்த நிகழ்வில் நிதியமைச்சரின் கருத்தை கடுஞ்சொல்லாக நினைத்து பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்தனா். கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்ற சம்பவங்கள் இதுவரை நடைபெற்றதில்லை.

விரும்பத்தகாத வகையில் பாஜகவினா் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT