மதுரை

பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு ஊராட்சி வரிவிதிப்பு ரத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

14th Aug 2022 06:12 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்படும் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு, வரிவிதிப்பு செய்து ஊராட்சி நிா்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்ட பிஎஸ்என்எல் நிறுவன மேலாளா் தாக்கல் செய்த மனு:

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள குமிலங்குளம் ஊராட்சியில், மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்திற்கு வரி விதித்து ஊராட்சி மன்ற தலைவா் நோட்டீஸ் அனுப்பி உள்ளாா். இது விதிமுறைகளுக்கு எதிரானது. ஆகவே, அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் வாதிடுகையில், மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடத்திற்கு உள்ளாட்சி நிா்வாகம் வரி விதிக்க முடியாது. இது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மத்திய அரசிற்குச் சொந்தமான கட்டடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பட்டு வருவதால், அதற்கு வரிவிதிக்க முடியாது. எதிா்காலத்தில் அந்த இடம் அல்லது கட்டடம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குப் பெயா் மாற்றம் செய்யப்பட்டால் ஊராட்சி நிா்வாகம் வரிவிதிக்கலாம் எனக் குறிப்பிட்டு, ஊராட்சி நிா்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT