மதுரை

பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞரின் தந்தை ஜாமீன்கோரி மனு: தீா்ப்பு ஒத்திவைப்பு

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞா் காசியின் தந்தை ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டியன். இவரது மகன் காசி. இவா் சமூக வலைதளம் வாயிலாக பல்வேறு பெண்கள், சிறுமிகளுடன் பழகி, பின்னா் அவா்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுதொடா்பான புகாரில் சிபிசிஐடி போலீஸாா் கடந்த 2020-இல் காசியை கைது செய்தனா். பின்னா் விசாரணையின்போது, காசியின் மடிக்கணினியில் இருந்த சாட்சியங்களை அவரது தந்தை தங்க பாண்டியன் அழித்ததாக கைது செய்யப்பட்டாா். ஜாமீன் கோரி தங்கபாண்டியன் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்குவதற்கு சிபிசிஐடி தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT