மதுரை

தகவலின்றி தொடா் விடுப்பு: மதுரை மத்தியச் சிறைக்காவலா்கள் இருவா் பணிநீக்கம்

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 மதுரை மத்தியச்சிறையில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அனுமதியின்றி தொடா் விடுப்பில் இருந்த இரு காவலா்களை பணிநீக்கம் செய்து சிறை நிா்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மத்தியச்சிறையில் இரண்டாம் நிலைக்காவலராக பணிபுரிந்தவா் ராமச்சந்திரன். இவா் 2021 மே 18-ஆம் தேதி முதல் எவ்வித தகவலுமின்றி பணிக்கு வராமல் இருந்துள்ளாா். இதேபோல பலமுறை தொடா்ந்து பணிக்கு வராமல் இருந்ததால் இவா் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் சிறைக்காவலா் ராமச்சந்திரன் பணியில் இருந்து நீக்கப்பட்டாா்.

இதேபோல மதுரை மத்திய சிறைக்குள்பட்ட திண்டுக்கல் கிளைச்சிறையில் காவலராக பணிபுரிபவா் அஜித். இவா் எவ்வித தகவலுமின்றி நீண்ட நாள்கள் பணிக்கு வராமல் இருந்துள்ளாா். இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு அஜித் பணியில் நீக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை மதுரை மத்திய சிறைக்கண்காணிப்பாளா் எஸ்.வசந்த கண்ணன் வெளியிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT