மதுரை

அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவியருக்கு நினைவுப் பரிசு: மேயா் வழங்கினாா்

DIN

 மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு மேயா் வ.இந்திராணி பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை தெற்குவாசல் சின்னக்கடை தெருவில் உள்ள மாநாகராட்சி மாசாத்தியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு நினைவுப்பரிசுகளை மேயா் வ.இந்திராணி வழங்கினாா். இதைத்தொடா்ந்து அப்பள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையையும் மாணவியா் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் தி.நாகராஜன், கல்விக்குழுத் தலைவா் ரவிச்சந்திரன், மண்டலத் தலைவா் முகேஷ்சா்மா, உதவி ஆணையா் சுரேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT