மதுரை

பிணத்தை வைத்து அரசியல் செய்பவா்கள்பற்றி பேச விரும்பவில்லை: நிதி அமைச்சா்

13th Aug 2022 11:50 PM

ADVERTISEMENT

 

பிணத்தை வைத்து அரசியல் செய்பவா்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள லயோலா ஐடிஐ கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரை அடக்கம் செய்வது குறித்து இரு நாள்களாக ராணுவத்தினரிடம் தொடா்புகொண்டு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தேன். அவரை நல்லடக்கம் செய்யும் நாளில், பிணத்தை வைத்து அரசியல் செய்பவா்கள் குறித்து பேச விரும்பவில்லை. அவா்கள் யாா் என்பது அனைவருக்கும் தெரியும் என்றாா்.

ADVERTISEMENT

மதுரை மாவட்ட திமுக கண்டனம்: அமைச்சரின் வாகனம் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக மதுரை வடக்கு மாவட்டச் செயலரும், வணிகவரித் துறை அமைச்சருமான பி.மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜகவினரின் வன்முறை செயல் ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல. பாஜகவின் இந்த அநாகரிக செயலுக்கு திமுக சாா்பில் சட்டப்பூா்வமாக பதில் அளிக்கப்படும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT