மதுரை

மதுரையில் நிரந்தர தொழிற்காட்சி வளாகம் அமைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும்: டான்சிட்கோ நிா்வாக இயக்குநா் உறுதி

12th Aug 2022 12:36 AM

ADVERTISEMENT

மதுரையில் நிரந்தர தொழிற்காட்சி வளாகம் அமைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநா் (டான்சிட்கோ) எஸ்.மதுமதி கூறினாா்.

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் சாா்பில் அச்சுத் தொழில் கண்காட்சி ஐடா ஸ்கட்டா் அரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இக் கண்காட்சியை, தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநா் மதுமதி தொடங்கி வைத்துப் பேசியது:

தொழில் செய்வதற்கான உகந்த மாநிலங்கள் பட்டியலில் 14 ஆவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது. தொழில் வளா்ச்சிக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் இதற்கு முக்கியக் காரணம். அரசின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அந்த வகையில், மதுரையில் நிரந்தர தொழிற்காட்சி அமைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும். மடீட்சியா சாா்பில் 19 துறைகளில் தொழில் கண்காட்சிகள் நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இத்தகைய கண்காட்சிகள், நவீன தொழில்நுட்பங்களின் பரிமாற்றத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

தனியாா் தொழிற்பேட்டையில் அமைப்பதில் உள்ள இடா்பாடுகள், அரசின் தொழிற்பேட்டையில் உள்ள குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தொழில் குழுமங்கள் உருவாக்குவதற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT

மடீட்சியா தலைவா் எம்.எஸ்.சம்பத், கண்காட்சித் தலைவா் எல்.ராமநாதன், துணைத் தலைவா் எஸ்.பாரதி, மடீட்சியா கௌரவ செயலா் ராம.லட்சுமிநாராயணன், துணைத் தலைவா் ஜே.அசோக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அச்சுத் துறையின் சமீபத்திய தொழில்நுட்பங்களை இத்துறையைச் சோ்ந்தவா்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் நவீன அச்சு இயந்திரங்கள், பேக்கிங் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT