மதுரை

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பலாத்காரம் செய்யமுயன்ற கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

12th Aug 2022 12:37 AM

ADVERTISEMENT

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே ராவுத்தன்பட்டி கூவலப்புரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பவுன்ராஜ் (58). இவா், மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை, தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா். அப்பகுதியில் இருந்தவா்கள் சென்று சிறுமியை மீட்டுள்ளனா். இதனிடையே பவுன்ராஜ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, பவுன்ராஜை கைது செய்தனா்.

மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.ராதிகா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,

ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையை, பவுன்ராஜ் வழங்கவும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT