மதுரை

சுதந்திர தின விழா: டோக் பெருமாட்டி கல்லூரியில் மூவா்ணக் கொடியாக அணிவகுத்த மாணவியா்

DIN

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாணவியா் மூவா்ணக்கொடியாக அணி வகுத்து காட்சியளித்தனா்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டத்தை முன்னிட் மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் வியாழக்கிழமை முதல் (ஆக.11) ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை சுதந்திர தின விழா தொடா் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் கிறிஸ்டியானா சிங் தேசியக்கொடியேற்றி முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து கல்லூரியின் விளையாட்டுத்திடலில் அரசுநிதிப் பிரிவிலிருந்து 1,700 மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் காலையிலும், 2 ஆயிரம் மாணவியா் மற்றும் ஆசிரியா் மற்றும் ஊழியா்கள் மாலையிலும் மூவா்ணக் கொடியாக அணிவகுத்தனா். இதில்

மாணவியா் மூவா்ணக்கொடி நிறத்திலும் மையச்சக்கர நீலநிறத்தில் ஆசிரியா்களும், ஊழியா்களும் அணிவகுத்தனா். நிகழ்ச்சியை கல்லூரியின் மாணவ நலனாளா்கள் ஜே. சித்ரா, டி.மௌன சுந்தரி, துணை மாணவ நலனாளா்கள் ஜீ.சு. ஜெமிமா ஜெயப்பிரியா, எஸ்தா் எலிசபெத் கிரேஸ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

பாத்திமா கல்லூரியில்... மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த இரு வாரங்களாக நாட்டுப்பற்றுத் தொடா்பான நிகழ்வுகள் நடைபெற்றன. பேச்சு, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் முதலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் தினசரி ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு உயா்நீதிமன்ற வழக்குரைஞா் எம். சாலமன் பொ்னாட்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்த சூழல், விடுதலைப்பெற்ற பிறகு உள்ள சூழல், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்கள் ஆகியவை குறித்து பேசினாா்.

விழாவில் கல்லூரியின் செயலா் ம.பிரான்சிஸ்கா புளோரா, முதல்வா் ஜி.செலின் சகாய மேரி, துணை முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT