மதுரை

மதுரை கல்வி நிலையங்களில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி: அமைச்சா், மேயா் பங்கேற்பு

DIN

மதுரையில் கல்வி நிலையங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிகளில் அமைச்சா் பி.மூா்த்தி, மாநகராட்சி மேயா் வ.இந்திராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை போதை ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு அமைச்சா் பி.மூா்த்தி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், முதன்மைக்கல்வி அலுவலா் கா.காா்த்திகா, அலங்காநல்லூா் பேரூராட்சித் தலைவா் ரேணுகா ஈஸ்வரி, பள்ளி தலைமையாசிரியை லதா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.

மதுரை மாநகர காவல்துறை சாா்பில் காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையா் டி. செந்தில்குமாா், துணை ஆணையா்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ்(வடக்கு), ஆறுமுகசாமி (போக்குவரத்து) ஆகியோா் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்று போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனா்.

மேயா் பங்கேற்பு:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மேயா் வ.இந்திராணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவா்கள் உறுதி மொழி ஏற்றனா்.

எம்எல்ஏ பங்கேற்பு: மதுரை காமராஜா் சாலையில் உள்ள செளராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, மாணவா்களுக்கு போதைப்பொருள் பயன்பாடுக்கு எதிராக அறிவுரைகள் வழங்கினாா். இதில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 1500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

மீனாட்சி மகளிா் கல்லூரி: மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் செல்லூா் காவல் ஆய்வாளா் எஸ்.வேதவல்லி மற்றும் கல்லூரி பேராசிரியைகள், மாணவியா் பங்கேற்றனா்.

தியாகராஜா் கல்லூரி: மதுரை தெப்பக்குளம் தியாகராஜா் கல்லூரியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்துறை தலைவா் மலா்விழி மங்கையா்கரசி மற்றும் பேராசிரியா்கள் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: நாகமலை புதுக்கோட்டை ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு மனிதச்சங்கிலி பேரணிக்கு கல்லூரி முதல்வா் பி.எஸ்.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். சுயநிதிப்பிரிவு இயக்குநா் பி.ஸ்ரீதா், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் டி.செந்தில்பாண்டியன், திட்ட அலுவலா்கள் எம்.சுமதி, ஏ.பிரபு, ஏ.அன்சாரி, பி.பாலமுருகன், அங்காளஈஸ்வரி மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

செந்தமிழ் கல்லூரி: மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கி.வேணுகா தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தாா். பேராசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியா் உறுதிமொழி ஏற்றனா்.

அல் அமீன் மேல்நிலைப் பள்ளி: மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். கோ.புதூா் காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் ராஜகோபால், போக்குவரத்து சாா்பு- ஆய்வாளா் அய்யனாா், சிறப்பு சாா்பு- ஆய்வாளா் அழகா்சாமி மற்றும் மாணவா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.

எல்கேபி நகா் அரசு நடுநிலைப் பள்ளி: அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். போதைப் பொருள் பழக்கம் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பற்றி ஆசிரியா் ராஜவடிவேல் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT