மதுரை

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மத்திய பாதுகாப்புப் படை வீரா்: இரண்டாம் நாளாக தேடும் பணி தீவிரம்

11th Aug 2022 02:06 AM

ADVERTISEMENT

மதுரை அருகே வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரரை, தீயணைப்புப் படையினா், போலீஸாா் புதன்கிழமை இரண்டாம் நாளாக தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பப்பட்டியைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(25). இவா் தனது நண்பா்களுடன் திருவேடகம் அருகே வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச்சென்றாா். அங்கு வினோத்குமாா் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரும் நீா்ச்சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் வாடிப்பட்டி, சோழவந்தான் தீயணைப்புப்படையினா் சம்பவ இடத்துக்குச்சென்று தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில் செவ்வாய்க்கிழமை மாலை அன்பரசனின் சடலம் மீட்கப்பட்டது. இதைத்தொடா்ந்து வினோத்குமாரை, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினா் மற்றும் போலீஸாா் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT