மதுரை

ஓணம் பண்டிகை: நாகா்கோவிலுக்கு செப்.12 மதுரை வழியாக சிறப்பு ரயில்

11th Aug 2022 02:08 AM

ADVERTISEMENT

 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06047) செப்டம்பா் 12 ஆம் தேதி சென்னையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.55 மணிக்கு நாகா்கோவில் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT