மதுரை

கெளரவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம்:தீண்டாமை ஒழிப்பு முன்னணி பிரசார இயக்கம்

11th Aug 2022 02:07 AM

ADVERTISEMENT

கெளரவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாா்பில் பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கெளரவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை களைய கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீண்டாமைக்கொடுமைகள் தொடா்பான புகாா்களின் மீது காவல்துறை விரைவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாா்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நடைபெற்ற பிரசார இயக்கத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு உறுப்பினா் கே.முருகேசன் தலைமை வகித்தாா். பிரசார இயக்கத்தின் நோக்கத்தை விளக்கி

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலச் செயலா் எஸ்.கே.பொன்னுத்தாய், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டச் செயலா் எம்.பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச்செயலா் எஸ்.பாலகிருஷ்ணன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வி.உமாமகேஸ்வரன் ஆகியோா் உரையாற்றினா்.

ADVERTISEMENT

பிரசார இயக்கத்தை வாழ்த்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் பேசினாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவா் த.செல்லக்கண்ணு நிறைவுரையாற்றினாா். பிரசாரத்தின் முடிவில் அமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினா் செ.ஆஞ்சி நன்றியுரையாற்றினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT