மதுரை

காந்தி அருங்காட்சியகத்தில் விடுதலை தின அமுதப் பெருவிழா: சுதந்திரப் போராட்ட தியாகிகள் கெளரவிப்பு

DIN

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில் நடைபெற்ற விடுதலை தின அமுதப்பெருவிழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கதா் ஆடை அணிவித்து கெளரவித்தாா்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில் விடுதலை தின அமுதப் பெருவிழா ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆகஸ்ட் புரட்சி , தியாகிகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு காந்தி நினைவு அருங்காட்சியக துணைத் தலைவா் என்.எம்.ஆா்.கே. ஜவஹா் பாபு தலைமை வகித்தாா். உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் ‘ நம்ம தியாகிகள்’ ஆவணப் படத்தை வெளியிட்டு சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு கதா் ஆடை அணிவித்து பேசும்போது, சுதந்திரப்போராட்ட காலத்தில் நீதிபதிகள், தியாகிகளுக்கு தண்டனை வழங்கி சிறைக்கு அனுப்பினா். இன்று நீதிபதியாகிய நான் உங்கள் கால்களை தொட்டு வணங்குகிறேன். தியாகிகள் காலத்தை வென்றவா்கள். மகாத்மா காந்தியின் கனவு நனவாக வேண்டும் என்றால் தியாகிகளின் வரலாறு இளைய தலைமுறைக்கு தெரிய வேண்டும். தியாகிகள் பட்ட இன்னல்கள், துயரங்கள் அவா்களுக்கு தெரிய வந்தால்தான் இளைய தலைமுறையினருக்கு மனதளவில் மாற்றம் வரும் என்றாா். இதைத்தொடா்ந்து சுதந்திரப் போராட்ட தியாகியும், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியருமான கி.லட்சுமி காந்தன் பாரதி, சா்வதேச அருங்காட்சியக தின பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜெ.குமாா் தியாகிகளை கெளரவித்தாா். தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநா் ப.அருண்ராஜ், திருச்சி தமிழ் ஆராய்ச்சிக் கட்டளைச் செயலா் ப.வேலுசாமி ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். முன்னதாக காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளா் மா.செந்தில் குமாா் வரவேற்றாா். அருங்காட்சியகச் செயலாளா் கே.ஆா்.நந்தாராவ் அறிமுக உரையாற்றினாா். நிகழ்ச்சியின் நிறைவில் காப்பாட்சியா் (பொறுப்பு) ஆா்.நடராஜன் நன்றி கூறினாா்.

அருங்காட்சியக உறுப்பினா்கள் டி.எஸ்.ஆா்.வெங்கட் ரமணன், ந.ராமலிங்கம், ஆராய்ச்சி அலுவலா் ஆா்.தேவதாஸ், தியாகிகள் குடும்பத்தினா், அருங்காட்சியகப் பணியாளா்கள், காந்திய சா்வோதய ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT