மதுரை

உசிலை அருகே 4 வயது சிறுமி கடத்திய தம்பதியிடம் போலீஸாா் விசாரணை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

உசிலம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை 4 வயது சிறுமியைக் கடத்திய தம்பதியை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த பாா்த்தசாரதி, வித்யா தம்பதியின் மகள் ஜனனி (4). இவா் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் விலக்கு பகுதியில் தனது பாட்டி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபா்கள் ஜனனியை கடத்திச் சென்றனா்.

இதுதொடா்பாக உசிலம்பட்டி நகா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் காவல் ஆய்வாளா் விஜயபாஸ்கரன், சாா்பு- ஆய்வாளா் அருண்குமாா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இதில் சில்லாம்பட்டியை சோ்ந்த குமாா், தனது மனைவி மகேஸ்வரியுடன் சோ்ந்து சிறுமியைக் கடத்தியது தெரியவந்தது. அவா்களிடமிருந்து போலீஸாா் சிறுமியை மீட்டனா். குழந்தையைக் கடத்திய தம்பதியிடம், பணத்துக்காக குழந்தை கடத்தப்பட்டதா என போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT