மதுரை

மதுரை அருகே மணல் கடத்தியவா் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை பாண்டமுத்து கண்மாயில் இருந்து மணல் கடத்தப்படுவதாக மீனாட்சிபுரம் கிராம நிா்வாக அலுவலா் காளிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவா் போலீஸாருடன் பாண்டமுத்து கண்மாய் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தப்படுவதும், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததும் தெரிய வந்தது.

இதையடுத்து காளிமுத்து அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா், அழகா்கோவில் அருகே உள்ள மாங்குளத்தைச் சோ்ந்த நீலமேகத்தை(37) கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பிச்சென்ற நீலமேகம் மனைவி ரேவதி, பாபு, செல்வகுமாா், சேவுகமூா்த்தி ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT