மதுரை

கீழையூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மேலூா் அருகேயுள்ள கீழையூரில் சுதந்திரதின பவளவிழாவையொட்டி காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் கீழையூரில் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அங்கிருந்து சோழவந்தான் வரை பிரசார பயணம் புறப்பட்டனா். மேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்லியஸ்ரெபோனி தலைமையிலான போலீஸாா்

கூட்டத்தினரை தடுத்து நிறுத்தி, நடைபயணத்துக்கு அனுமதிபெறவில்லை எனத் தெரிவித்தனா். பின்னா் மேலூா் அரசு கலைக்கல்லூரியிலிருந்து செக்கடி வரை அணிவகுத்துச் செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.

பின்னா் காங்கிரஸ் கட்சியினா் பேரணியாகச் சென்று செக்கடி பஜாரிலுள்ள தியாகி கக்கன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT