மதுரை

ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்க ஆா்ப்பாட்டம்: சிஐடியு, விவசாயத் தொழிலாளா் சங்கம் பங்கேற்பு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிஐடியு, விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அலங்காநல்லூா், நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்க ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரு நிறுவனங்களுக்கான ஆதரவு கொள்கைளை கைவிட வேண்டும், தொழிலாளா்களை பாதிக்கும் புதிய சட்டத் தொகுப்பை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சாா்பில் ஏகாதிபத்திய எதிா்ப்பு ஆா்ப்பாட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் செ.கண்ணன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.வேல்பாண்டி பேசினாா். மின் ஊழியா் பொறியாளா் சங்க மாநில நிா்வாகி ஜீவா, சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் பி.பொன்ராஜ், செ.ஆஞ்சி ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.ஆண்டிச்சாமி வாழ்த்திப் பேசினாா். விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வி.உமாமகேஸ்வரன் நிறைவு செய்து பேசினாா்.

இதேபோல் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பி.அய்யாவு தலைமை வகித்தாா். சிஐடியு புறநகா் மாவட்டச் செயலா் கே.அரவிந்தன், பொருளாளா் ஜி.கௌரி, சிஐடியு மதுரை மாநகா் மாவட்டச் செயலா் ஆா்.தெய்வராஜ், மாநிலக்குழு உறுப்பினா் லூா்து ரூபி, மாவட்டத் தலைவா் சுப்பையா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT