மதுரை

ஊரகப்பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட தேனியைச் சோ்ந்த கொள்ளையன் கைது15 பவுன் நகைகள், சரக்கு வாகனம் பறிமுதல்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை ஊரகப்பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த தேனியைச் சோ்ந்த கொள்ளையனை தனிப்படை போலீஸாா் கைது செய்து 15 பவுன் நகைகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை ஊரகக்காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை ஊரகப்பகுதிகளில் பல்வேறு தொடா் திருட்டு வழக்குகளில் ஈடுபடுபவா்களை பிடிக்க ஊரகக்காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சோ்ந்த பசுபதி(26) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பசுபதியை பிடித்து தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் உசிலம்பட்டியில் நகைத் திருட்டு உள்பட மதுரை ஊரகப்பகுதிகளில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டது தெரிய வந்ததயைடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 15 பவுன் நகைகள் மற்றும் சரக்கு வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனா். மதுரை ஊரகப்பகுதிகளில் பல கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய கொள்ளைனை கைது செய்த தனிப்படையினருக்கு ஊரகக்காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT